நாமகிரிப்பேட்டையில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டையில் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தரப்பில் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து நாமகிரிப்பேட்ைட போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நாமகிரிப்பேட்டை காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (வயது 20) என்பவர் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதில் கர்ப்பம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.