கோவையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வெளிநாட்டுக் காரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது
கோவையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வெளிநாட்டுக் காரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது
கோவை
கோவையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த வெளிநாட்டுக் காரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பஸ்சில் இருந்த பயணிகளிடம் துண்டு பிரசுரம் வினியோகித்து வெளிநாட்டுக்காரர் ஒருவர் பிரசாரம் செய்தார்.
மேலும் அவர் தி.மு.க. கட்சி கொடியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
அவரிடம் பேசிய போது அவரது பெயர் நெகோசியா ஸ்டெபன் மரியஸ் என்பதும், ஐரோப்பிய நாடானா ருமேனியாவை சேர்ந்தவர் என்பதும், தொழில்முறை பயணமாக கோவை வந்து தனது நண்பர் கோகுலுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இலவச பயணம்
இது குறித்து நெகோசியா ஸ்டெபன் மரியஸ் கூறுகையில், நான் அரசு பஸ்சில் சென்றபோது பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர்.
இதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு தான் காரணம் என்று பயணிகள் கூறினார்கள்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை அறிந்து கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன் என்றார்.
இதற்கிடையே தொழில்முறை விசாவில் வெளிநாட்டில் இருந்து ேகாைவ வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் நெகோசியா ஸ்டெபின் மரியஸ் உடனடியாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை குடிவரவு (இமிக்ரேஷன்) அலுவலகத்தில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.