ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடுபோனது.;

Update: 2022-02-17 17:53 GMT
கரூர்
கரூர்
கரூர் மண்மங்கலம் பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 62). இவர் நேற்று முன்தினம் முனியப்பன் கோவில் பகுதியிலிருந்து பஸ்சில் ஏறி மண்மங்கலம் செல்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது மண்மங்கலம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் பஸ் சென்று கொண்டு இருந்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணம்மாள் வாங்கல் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்  குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்