தாய், மகனை தாக்கிய 2 பேர் கைது

தாய், மகனை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-17 17:51 GMT
கரூர்
கரூர்
கரூர் வடக்கு காந்திகிராமம் முத்து நகரில் வசித்து வருபவர் மனோகர்(வயது 39). ஓட்டல்  உரிமையாளரான இவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில்,  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.10,000 கடன் வாங்கி இருந்ததாகவும், அதில் ரூ.6 ஆயிரத்து 600 திரும்ப செலுத்தி விட்டதாகவும், இது தொடர்பாக வெள்ளாளபட்டியைச் சேர்ந்த பாஸ்கர்(33) மற்றும் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற பாலகிருஷ்ணன்(31) ஆகிய  இருவரும் எனது வீட்டிற்கு வந்து தன்னையும், தனது தாய் லட்சுமியையும்(70) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்