விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

வேளாங்கண்ணி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-17 17:48 GMT
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருடைய மகன் அகஸ்டின்ராஜ் (வயது 22). இவர் கேட்டரிங் படித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்துள்ளார்.  உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அகஸ்டின்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்