‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் கிராமம் பூங்கா நகர் பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மண் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. சேறும், சகதியுமான மண் பாதையில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்கா நகர் பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பூங்காநகர்வாசிகள், திருவாரூர்.