திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
திருவாரூர்:-
திருக்குறளை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் கல்வி அறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர்வதற்கும் வழிவகுக்கும். எனவே திருக்குறள் ஒப்புவித்தல் செய்யும் மாணவர்களுக்கு தமிழக அரசு பரிசு வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆண்டுகளில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மஞ்சுஷா, திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாருதர்ஷிணி ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுத்தொகையாக தலா ரூ.10 அயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா உடன் இருந்தார்.