வாகனம் மோதி பெண் பலி கணவர் கண் முன்னே பரிதாபம்
வாகனம் மோதி கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக பலியானார்.
வேடசந்தூர்:
அகரம் அருகே உள்ள அருகம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெருமாளம்மாள் (45). இருவரும் நேற்று முன்தினம் இரவு ஜி.நடுப்பட்டியில் உள்ள தனது மகள் மாரியம்மாளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றனர். மணிகண்டன் மொபட்டை ஓட்டினார். பெருமாளம்மாள் பின்னால் அமர்ந்து இருந்தார்.
தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் கெண்டையகவுண்டனூர் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்தில் கணவர் கண் முன்னே பெருமாளம்மாள் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.