பாலத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் விபத்து அபாயம்
பாலத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் விபத்து அபாயம்
மடத்துக்குளம் நால்ரோட்டிலிருந்து குமரலிங்கம் செல்லும் ரோட்டில் 3 கி.மீ.தொலைவில் கிழக்கு நீலம்பூர் கிளைவாய்க்கால் மீது பாலம் அமைந்துள்ளது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த பாலத்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத காரணத்தால் இரவில் பாலம் தெரிவது இல்லை.முதன்முறையாக இந்த வழித்தடத்தில் பயன்படுத்துபவர்கள் திணறுகின்றனர்.
பாலத்தின் இருபுறமும் சிறு தூண்கள் தடுப்பாக கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்தத்தூண்களில் எந்தவித அறிவிப்பும், ஒளிரும் ஸ்டிக்கரும் இல்லை. இதனால் இரவு நேரம் விபத்துக்கள் நடக்கிறது.இதற்கு தீர்வாக பாலத்தின் கட்டமைப்பு முழுமையாக தெரியும் வகையில் பாலத்தின் மீது பல இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.