காவேரிப்பட்டணம், ஊத்தங்கரையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு

காவேரிப்பட்டணம், ஊத்தங்கரையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.;

Update: 2022-02-17 10:51 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வாக்குச்சாவடி மையங்கள், ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு படிவங்கள், வாக்காளர் பதிவேடு, வாக்குப்பதிவு பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள், உறைகள், தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல அலுவலர் மூலமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் தயார் நிலையில் பிரித்து வைக்கும் பணி அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் நடந்தது. 
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களான முருகன், சாம்கிங்ஸ்டன், ஊத்தங்கரை தாசில்தார் தெய்வநாயகி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சீனிவாசன், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்