செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

செல்போனில் ‘கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2022-02-17 00:21 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இவருடைய மனைவி மீனா. இவர்களுடைய மகன் சுரேஷ் (வயது 16). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சுரேஷ், வீட்டில் எந்தநேரமும் படிக்காமல் செல்போனில் ‘கேம்’ விளையாடி வந்ததாக தெரிகிறது. இதனால் அவருடைய தாய் மீனா, “புத்தகத்தை எடுத்து படிக்காமல் இப்படி எந்நேரமும் செல்போனில் ‘கேம்’ விளையாடுகிறாயே?” என மகனை கண்டித்தார்.

இதனால் விரக்தி அடைந்த சுரேஷ், நேற்று தனது அறையில் தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த மீனா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனது மகன் சுரேஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார், தூக்கில் தொங்கிய சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்