மூதாட்டி கொலையில் வடமாநில வாலிபர் கைது - தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்தார்

அம்பத்தூர் அருகே மூதாட்டி கொலையில் வடமாநில வாலிபர் கைதானார். தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

Update: 2022-02-17 00:11 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் சாலை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரத் சந்திரன். இவருடைய மனைவி நிர்மலா (வயது 64). சரத் சந்திரன் வெளியே சென்றிருந்ததால் நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நிர்மலா கொைல செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த நகைகள், அவர் பயன்படுத்திய செல்போன் மாயமாகி இருந்தது. மர்மநபர்கள், மூதாட்டியை கொன்று நகை, செல்போனை ெகாள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுபற்றி துணை கமிஷனர் மகேஷ் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாவின் செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அம்பத்தூர் ெரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பைராம் டிடு (29) என்பதும், பட்டதாரியான அவர்தான் மூதாட்டி நிர்மலாவை கொன்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து மேலும் தீவிரமாக விசாரித்தனர்.

பைராம் டிடு, கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னை வந்தார். தனது மாமா வீட்டில் தங்கி, அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவர் மூதாட்டி வீட்டின் வழியாக தினமும் வேலைக்கு சென்று வந்தார். அப்போது மூதாட்டி நிர்மலா, கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் அவரது கண்ணில் பட்டது.

சம்பவத்தன்றும் நகைகள் அணிந்தபடி மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பைராம் டிடு, மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார். ஆனால் நகையை பறிக்க விடாமல் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த பைராம் டிடு, மூதாட்டி நிர்மலாவை ெகான்றுவிட்டு, அவர் அணிந்து இருந்த நகை, அவரது செல்போனை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரிந்தது.

மேலும் விசாரணையில் அவர் தங்கம் என நினைத்து கொள்ளையடித்து சென்ற நகைகள், கவரிங் என்பதும் தெரியவந்தது.

கொலையான மூதாட்டியின் செல்போன் சிக்னலை வைத்து சம்பவம் நடந்த 17 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்