சிவகிரியில் காமாட்சியம்மன் கோவில் விழா சாமி-அம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்
சிவகிரியில் நடந்த காமாட்சியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சாமி-அம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தார்கள்.
சிவகிரி
சிவகிரியில் நடந்த காமாட்சியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் சாமி-அம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தார்கள்.
காமாட்சியம்மன்
சிவகிரியில் பழமையான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி அன்று மாசி மகம் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
சாமி வேடம்
இதையொட்டி காலை 11 மணிக்கு சிவகிரி தேர் வீதி வழியாக தீர்த்த குடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் சிவன், பார்வதி, காளி, கிருஷ்ணபகவான் போல் தத்ரூபமாக வேடம் அணிந்து ஆடிப்பாடி வந்தார்கள்.
ஊர்வலம் கோவிலை சென்றடைந்த பின்னர் காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தார்கள். அதன்பிறகு மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.