கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-02-16 20:43 GMT
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள மடத்துப்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). தொழிலாளியான இவர் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மரத்தில் தேங்காய்களை பறித்தார். அப்போது சில தேங்காய்கள் கிணற்றில் விழுந்து விட்டது. அதனை எடுப்பதற்காக செல்வராஜ் கிணற்றில் இறங்கினார். 
அப்போது, திடீரென்று மயங்கி தண்ணீரில் மூழ்கினார். வெகு நேரமாய் கிணற்றில் இருந்து செல்வராஜ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருணாசலம் கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜை பிணமாக மீட்டனர். கிணற்றில் மூழ்கி அவர் இறந்தது ெதரியவந்தது. இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்