களக்காடு:
களக்காடு வியாசராஜபுரம் செய்கு லெப்பை நயினார் தர்கா கந்தூரி விழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலையில் கொடி ஊர்வலம் இடம்பெற்றது. இஸ்லாமிய இளைஞர்களின் சிலம்பாட்டத்துடன், யானை மீது கொடி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டது. 2-ம் நாள் மாலையில் தீப அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.