லாரியில் கடத்தப்பட்ட 17½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

நாங்குநேரி அருகே லாரியில் கடத்தப்பட்ட 17½ டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-02-16 20:03 GMT
நெல்லை:
நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் நேற்று நாங்குநேரி சுங்கசாவடி பகுதியில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 350 மூட்டைகளில் 17 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நெல்லை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த லெனின் குமார் என்ற சிவா (வயது 32), கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சாத்தி மூஞ்சிரை பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் சிஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்