மதுரை,
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் தீனச்சந்திரன். இவர் வரிச்சியூர் அருகிலுள்ள உறங்கான்பட்டி தொழிற் பேட்டையில் விவசாயத்திற்கு பயன்படும் பிளாஸ்டிக் பைப்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 60-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது மாலையில் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்ததில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ மளமனவென அனைத்து பகுதியிலும் பரவியதால் ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்து தல்லாகுளம், மேலூரில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் 2 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ் டிக் பைப்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின. ஆனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து கருப்பாயூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.