கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது

Update: 2022-02-16 19:22 GMT
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனால் கலைநயத்துடன் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக புராதன சின்னமாக விளங்கும் இக்கோவிலில் கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசிமக திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனையும், யாகசாலை பூஜைகள், சாமி வீதிஉலா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து தேர் வீதிஉலா நடைபெற்றது.
 இதில், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனைத்தொடர்ந்து தேர் புறப்பட்டு ராஜவீதி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவில் ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோவில், உட்கோட்டை, மாளிகைமேடு, சுண்ணாம்புகுழி உள்பட பல்வேறு சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சமூர்த்திகள்
முன்னதாக, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கோவிலில் இருந்து பிரகார உலா நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்திரசேகர சுவாமி, சந்திரமவுலி தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். 

மேலும் செய்திகள்