வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை, அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார்.;

Update: 2022-02-16 19:10 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியினை, அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார்.

அலங்கார ஊர்தி

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக நேற்று வந்தது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மலர் தூவி வரவேற்றார். 

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக கிராமிய கரகாட்ட கலை நிகழ்ச்சி, மேளம் கலை நிகழ்ச்சி, பம்பை, கைச்சிலம்பு, தவில், நாதஸ்வரம் முதலிய கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி, மாணவர், மாணவி
ள், நிகழ்த்திய நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், மண்ணின் கலைகளான பறையாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீர வரலாறு பற்றிய உரை, வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீர வரலாறு பற்றிய நாடகம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

உற்சாக வரவேற்பு

அமைச்சர் காந்தி பொதுமக்களுடன் சேர்ந்து இதனை கண்டுகளித்தார்.

பின்னர் வி.சி.மோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் வாலாஜா நகரத்தில் வாலாஜா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்காடு -ஆரணி தேசிய நெடுஞ்சாலை பாலாறு மேம்பாலம், ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி பெண்கள் கலைக்கல்லூரி, திமிரி பேரூராட்சியில் திமிரி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆகிய இடங்களில் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளித்து பார்வையிட்டனர்.

மேலும் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி பயணித்த சாலை நெடுகிலும், பொது மக்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்ததோடு புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஆற்காடு நகரம் வழியாக சென்று ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான தாமரைப்பாக்கம் பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலங்கார ஊர்தியானது நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் வழி அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, துணைத் தலைவர் நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் நிர்மலா, வடிவேலு புவனேஸ்வரி, கலைக்குமார், அனிதா, மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி துறைசார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்