ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்

போளிப்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றப்பட்டன.

Update: 2022-02-16 19:05 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் போளிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புரம்போக்கு நிலத்தில் சிலர் ஆக்ரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். 

அந்த வீடுகளை அகற்றிக்கொள்ளுமாறு போளிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் சம்மந்தபட்டவர்களிடம் கூறி உள்ளார். ஆனால் அவர்கள் அகற்றவில்லை. 

இதுகுறித்து சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

புகாரின் ஆக்கிமித்து கட்டப்பட்ட 5 வீடுகள், அடிதளம் மட்டும் அமைத்துள்ள 4 வீடுகளை தாசில்தார் வெற்றிகுமார் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். 

அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், வருவாய் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்