திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் தேரோட்டம்

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2022-02-16 18:51 GMT
குத்தாலம்:
குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதசாமி கோவில் தேரோட்டம்  நடந்தது. இதல் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி மக பெருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசாமி  கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இந்ததலத்தில் சாமி அம்மனை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதால் இந்ததலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இந்த தலத்திற்கு வந்து சாமி, அம்மனை பூஜித்து வேண்டி கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் மாசி மக பெருவிழா 200 ஆண்டுகளுக்கு பின்னா் நடைபெறுகிறது.
 மாசி மக பெருவிழாவையொட்டி ஹோமங்களை அய்யப்பன்  சிவாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.  மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் மற்றும் சாமி-அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
தேரோட்டம்
இந்தநிலையில் 10-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவையொட்டி கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன்  தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  தேர் கோவிலில் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.
 தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் இளையராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.  விழாவினை தொடர்ந்து நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்