பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
கோட்டூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோட்டூர்l;
கோட்டூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விஷம் குடித்தார்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்கணேஷ். இவருடைய மனைவி தேன்மொழி (வயது36). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று செந்தில்கணேஷ் தனது மனைவியிடம் பணம் கேட்டார். அப்போது தேன்மொழி பணம் இல்லை என்று கூறினார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தேன்மொழி வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கைது
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தேன்மொழி சிகிச்சை பலனின்றி இறந்தார். தேன்மொழி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது கோட்டூர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கோட்டூர் போலீசார் செந்தில்கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.