தந்தை, மகன் சிறை செல்வார்கள்-சஞ்சய் ராவத் உறுதி

கிரித் சோமையா, அவரது மகன் இருவரும் சிறை செல்வார்கள் என்று சஞ்சய் ராவத் கூறினார்.

Update: 2022-02-16 18:25 GMT
படம்
மும்பை, 
கிரித் சோமையா, அவரது மகன் இருவரும் சிறை செல்வார்கள் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
குற்றச்சாட்டு
 சிவசேனா தலைமை செய்தி தொடர்பளார் சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் பா.ஜனதா தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். 
குறிப்பாக கிரித் சோமையா மற்றும் அவரது மகன் நீல் சோமையா இருவருக்கும் பி.எம்.சி. வங்கி ஊழலில் தொடர்புடைய ராகேஷ் வாதவனுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். 
இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முதல்-மந்திரியிடம் சமர்ப்பித்து அவர்களை கைது செய்ய வலியுறுத்துவேன் என சஞ்சய் ராவத் தெரிவித்தார். 
சிறை செல்வார்கள்
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த கிரித் சோமையா, “நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒருபோதும் ஊழலில் ஈடுபட்டதில்லை. எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார். 
இந்தநிலையில் சஞ்சய் ராவத் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “தந்தை, மகன் இருவரும் சிறைக்கு செல்வார்கள். காத்திருந்து பாருங்கள். சுத்திகரிப்பு பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். 
இருப்பினும் பதிவில் கிரித் சோமையா, நீல் சோமையாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. 

மேலும் செய்திகள்