பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-16 18:11 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வண்டிக்கார முருகையா தெரு பகுதியை சேர்ந்தவர் சேதுபதி ராஜா (வயது 27). இவர் சொந்த வேலையாக ராமநாதபுரம் அருகே காட்டூரணி சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது குறத்தி அம்மன் கோவில் அருகே வரும்போது அந்த பகுதியில் நின்றிருந்த 3 பேர் அந்த வழியாக சென்றவர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொண்டிருந்தனர். சேதுபதி ராஜாவை கண்டதும் 3 பேரும் கத்தியை காட்டி பணம் கொடு இல்லை யென்றால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.இதனால் அங்கிருந்து தப்பி ஓடி வந்த சேதுபதி ராஜா ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழுதூரை சேர்ந்த செல்வராஜ் மகன் மோனிஷ்ராஜ் (19), முனியசாமி மகன் சுபாஷ் (22) ரமேஷ் மகன் சுதர்சன் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்