வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 18 பட்டு சேலைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த 18 பட்டுசேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-16 18:05 GMT
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வீட்டில்  வைக்கப்பட்டிருந்த  18 பட்டுசேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில்  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
18 பட்டுசேலைகள்
 இந்த நிலையில் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டுசேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தத. இதன்பேரில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும், துணை தாசில்தார் (தேர்தல்) எஸ்.மகேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நீடாமங்கலம் கீழத்தெருவில் ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் உரிய பில் ஆதாரம் இன்றி 18 பட்டு சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டுசேலைகளை வைத்திருந்த செல்லக்குட்டி (வயது55) என்பவரிடம் இருந்து பட்டுசேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டுசேலைகள் நீடாமங்கலம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 63 ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்