நாமக்கல்லில் விபத்து: தனியார் நிறுவன ஊழியர் சாவு
நாமக்கல்லில் விபத்து தனியார் நிறுவன ஊழியர் சாவு
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர் தனியார் முட்டை நிறுவனம் ஒன்றில் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மனைவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.