திருச்செங்கோடு அருகே விசைத்தறி தொழிலாளி தற்கொலை
திருச்செங்கோடு அருகே விசைத்தறி தொழிலாளி தற்கொலை
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 14-ந் தேதி உறவினர் திருமணத்திற்காக ஜலகண்டாபுரம் செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார்.
இந்த நிலையில் நேற்று கருவேப்பம்பட்டி கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். காரணம் என்ன? என்பது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.