சின்னசேலம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

சின்னசேலம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2022-02-16 17:36 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன்(வயது 36). தொடர்ந்து அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்த முருகேசன் மீது சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் 4 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்த நிலையில் அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்படி சின்னசேலம் போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் முருகேசனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்