கத்தியால் குத்தி பெண் படுகொலை

மயிலம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-16 17:29 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 55). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை தனது மனைவி என்றும் பாராமல் செல்வியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்த தகவல் அறிந்த திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா மற்றும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கைது

தொடர்ந்து செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குடும்ப தகராறில் மனைவியை கொன்றதாக கூறி  திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை சரண் அடைந்தார்.  இது குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.  குடும்ப தகராறில் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்