ஆதிமனிதர்களின் கல்வீடுகள் பராமரிக்கும் பணி

கொடைக்கானல் அருகே பழங்கால ஆதிமனிதர்கள் வசித்த கல்வீடுகள் பராமரிக்கும் பணியை தொல்லியல் துறை தொடங்கி உள்ளது.

Update: 2022-02-16 16:56 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்கால ஆதிமனிதர்கள் வசித்த கல்வீடுகள் உள்ளன. இந்த கல்வீடுகள் பராமரிப்பின்றி காணப்பட்டன. அப்பகுதி மக்கள் கல்வீடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதனை ஏற்று தொல்லியல் துறை சார்பில் கல்வீடுகளை பராமரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான பூமி பூஜையை திருச்சி தொல்லியல் துறை உதவி அலுவலர் சங்கர் தொடங்கி வைத்தார். இந்த பணி விரைவில் முடிவடைந்ததும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். 

இதையடுத்து பேத்துப்பாறை விரைவில் சுற்றுலா இடமாக மாறும் வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் கருதுகின்றனர். 

மேலும் செய்திகள்