பாம்பாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-கலெக்டர் பங்கேற்பு

பாம்பாறு அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்.;

Update: 2022-02-16 16:46 GMT
ஊத்தங்கரை:
தண்ணீர் திறப்பு
ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கலந்து கொண்டு பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். மேலும் கால்வாய் வழியாக வெளியேறிய நீரை மலர்தூவி வரவேற்றார். 
கால்வாய் பாசனம் மூலம் கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, மாரம்பட்டி, நடுப்பட்டி, பாவக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் வேடகட்டமடுவு ஆகிய ஊராட்சிகளில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
120 நாட்கள்
தண்ணீர் சுழற்சி முறையில் 120 நாட்கள் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தர்மபுரி கோட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் குமார், தாசில்தார் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ்குமரன், பாம்பாறு அணை உதவி பொறியாளர் கார்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்