கார்-ஆட்டோ மோதல்; 6 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் வத்தலக்குண்டுவில் இருந்து அய்யம்பாளையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.
பட்டிவீரன்பட்டியில் செல்லும்போது வத்தலக்குண்டு நோக்கி வந்த கார் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ், ஆட்டோவில் வந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த சாந்தி (32), பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரை ஓட்டி வந்த பட்டிவீரன்பட்டி அழகாபுரியை சேர்ந்த அருண்பாண்டி (20) என்பவர் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.