காட்டுயானைக்கு தீ வைத்த வழக்கில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கூடலூர் கோர்ட்டில் சரண்

மசினகுடி அருகே காட்டுயானைக்கு தீ வைத்த வழக்கில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கூடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2022-02-16 14:27 GMT
கூடலூர்

மசினகுடி அருகே காட்டுயானைக்கு தீ வைத்த வழக்கில் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கூடலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். 

காட்டு யானைக்கு தீவைப்பு

நீலகிரி மாவட்டம் மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதியில் காட்டு யானை சென்றபோது அதன் மீது சிலர் தீப்பந்தங்களை வீசி தீ ைவத்தனர். இதனால் அந்த யானை அலறி துடித்தபடி அங்கிருந்து ஓடியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் ைவரலானது. 

இதையடுத்து சிங்காரா வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி மாவனல்லா பகுதியைச் சேர்ந்த ரிக்கி ராயன் (வயது 32), ரேமண்ட் டீன் (28) மற்றும் பிரசாத் (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ரேமன் டீன், பிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர். 

கோர்ட்டில் சரண்

மேலும் இதில் தலைமறைவான முக்கிய நபரான ரிக்கி ராயன் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வந்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் ரிக்கிராயனை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. 

இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு ரிக்கி ராயன் கூடலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் சரணடைந்த ரிக்கி ராயனை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். 

மேலும் செய்திகள்