அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம்

அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம்

Update: 2022-02-16 13:32 GMT
சிக்கல்:-

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் மாசி பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கணபதி யாகம் மற்றும் லெட்சுமி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அஞ்சுவட்டத்தம்மனுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால் குடங்களை சுமந்து நான்கு வீதிகள் மற்றும் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்