இரண்டுதரைப்பாலத்தை உயர்த்திக் கட்டவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

இரண்டுதரைப்பாலத்தை உயர்த்திக் கட்டவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2022-02-16 11:15 GMT
குண்டத்திலிருந்து இருந்து மருதூர் செல்லும் வழியில் உள்ள இரண்டு தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டத்திலிருந்து இருந்து பெல்லம்பட்டி வழியாக செல்லும் ரோட்டில் பேட்டைக்காளிபாளையம் பிரிவு அருகே மற்றும் மருதூர் அருகே தரைப்பாலங்கள் உள்ளது இந்த ரோட்டின் வழியாக பொன்னாபுரம், உடுமலை, குடிமங்கலம், ஜல்லிபட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முக்கிய பிரதான சாலையாக உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் சென்று வருகின்றன இந்தநிலையில் மழைக்காலங்களில் உப்பாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடிமங்கலம், பெரியபட்டி, பூளவாடி, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் கணமழை பெய்யும்போது நீர்பெருக்கெடுத்து உப்பாறு அணையில் தேங்கும்.தண்ணீர் இரண்டு ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடும்போது பேட்டைக்காளிபாளையம் பிரிவு மற்றும் மருதூர் அருகே உள்ள தரைப்பாலத்திற்கு மேல் சுமார் 5அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும். இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் உள்ளது இதன் காரணமாக அப்பகுதிமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்
எனவே நீண்ட நாள் கோரிக்கையான இந்த பாலங்களை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த இடத்தில் உயர்மட்ட கான்க்ரீட் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்