வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவன்
வீட்டில் தூக்கில் பிணமாக மாணவன் தொங்கினார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் ஸ்ரீசாந்த்(வயது 11). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஸ்ரீசாந்த் திரும்பி வந்துள்ளார். வயலுக்கு சென்றிருந்த ஜெய்சங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் ஸ்ரீசாந்த் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஸ்ரீசாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து, அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.