தேர்தல் தகராறில் தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
தேர்தல் தகராறில் தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
மதுரை
மதுரை சிந்தாமணி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 29), அவனியாபுரம் கிழக்கு இளைஞரணி தி.மு.க. துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அய்யனார்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று நள்ளிரவு சரத்குமார் சிந்தாமணி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அய்யனார் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் அரிவாளால் சரத்குமாரை விரட்டி சென்று வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சரத்குமார் கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார், பாண்டிகுமார்(26), மணிகண்டன் (24), உதயகுமார் மற்றும் குமரவேல் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய யோகேஷ் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.