மக்காச்சோள தோட்டத்தில் ‘தீ’
வெம்பக்கோட்டை அருகே மக்காச்சோள தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உப்புபட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் மக்காச்சோளம் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது அறுவடை செய்யப்பட்டது போக சோளத்தட்டை மட்டும் தோட்டத்தில் பரவி இருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த தோட்டத்தில் பற்றிய தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.