கஞ்சி குடிக்கும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
பிரிக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கக்கோரி பழவூர் அருகே பொதுமக்கள் நேற்று கஞ்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர்.
வடக்கன்குளம்:
பிரிக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கக்கோரி பழவூர் அருகே பொதுமக்கள் நேற்று கஞ்சி குடிக்கும் போராட்டம் நடத்தினர்.
மக்கள் எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே வள்ளியூர் யூனியன் சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்தில் சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது சுமார் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த பஞ்சாயத்தில் இருந்து பிரிக்கப்பட்டு அருகில் உள்ள ஆவரைகுளம் மற்றும் பழவூர் பஞ்சாயத்தில் இணைக்கப்பட்டனர். இதற்கு அப்போது அந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை இணைக்கப்படவில்லை.
போராட்டம்
இந்நிலையில் அவர்களில் பலர் நூறு நாள் வேலைத் திட்டம், குடி தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு பழவூர் மற்றும் ஆவரைகுளம் பஞ்சாயத்து அலுவலகம் தேடிச் செல்வதால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலைகழிக்கப்படுவதாகவும், இதனை கண்டித்தும், மீண்டும் சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்சாயத்தில் வாக்காளர்களை இணைக்க வலியுறுத்தியும் நேற்று கஞ்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.