ஆன்லைன் மூலமாக டிக்கெட் எடுத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது
ஆன்லைன் மூலமாக டிக்கெட் எடுத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது;
தஞ்சாவூர்:-
தஞ்சை யாகப்பாநகரில் உள்ள இ-சேவை மையத்தில் ரெயில்வே துறை அனுமதியின்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஏட்டுகள் சுரேஷ்குமார், சிவனேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை விளார் சாலை பகுதியை சேர்ந்த பாலன் (வயது40) என்பவர் ரெயில்வே துறையின் உரிய அனுமதி இன்றி ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலனை போலீசார் தஞ்சை ஜுடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவிடைமருதூர் கிளை சிறையில் அடைத்தனர்.