ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்- வாகன ஓட்டிகள் அவதி

வள்ளியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-02-15 20:02 GMT
வள்ளியூர்:
வள்ளியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

சுரங்கப்பாதையில் கழிவுநீர்
வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ெரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. 
இந்த நிலையில் சுரங்கப்பாதையின் இருபுறத்தில் இருந்தும் கழிவுநீர் கசிந்து வருவதால் தற்போது சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. 

வாகன ஓட்டிகள் அவதி
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அங்கு கழுவுநீர் அதிகளவில் தேங்கி கிடப்பதால் மாற்றுப்பாதையில் செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழுவுநீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்