புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
திசையன்விளையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர்கள் லிபி பால்ராஜ், அலக்ஸ்மேனன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஸ்கூட்டரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மகாதேவன்குளம் பஞ்சாயத்து தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் முத்துவேல் (வயது 28), ஈசன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் புகையிலை பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி வந்து திசையன்விளை, உவரி, நவ்வலடி, இட்டமொழி, சாத்தான்குளம், உடன்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. கைதான முத்துவேல் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3,750 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.