முன்னேற்பாடுகள் குறித்து உதவி கலெக்டர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்
சீர்காழி:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி சீர்காழி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை உதவி கலெக்டர் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட உள்ள மை, வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து பொருட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் விடுபடாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யுமாறு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம்மை கேட்டுக் கொண்டார்.
ஆய்வின்போது நகராட்சி மேலாளர் காதர்கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் செல்லத்துரை, சார்லஸ், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.