ரூ.9 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி

பூம்புகார் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி;

Update: 2022-02-15 19:04 GMT
திருவெண்காடு:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூம்புகார் ஊராட்சி மாதாகோவில் தெருவில் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் முரு கண்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அதனை தொடர்ந்து அதே ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்ட பணிகளையும் பார்வையிட்டு, விரைந்து வீடுகளை கட்டும் பணியை முடிக்க பயனாளிகளிடம் கேட்டுக் கொண்டார். மேலும் வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய கரம் சுடுகாட்டு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பெருந்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துகுப்பம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் மீன் உலர்களம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதனையடுத்து தென்னம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பவல்லி ராஜா, நடராஜன் மற்றும் மோகனா ஜெயசங்கர், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்களுக்கு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்