வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

Update: 2022-02-15 19:01 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளும், உதயேந்திரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. 

வாணியம்பாடி அருகே உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள், வாக்கு எண்ணும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, நகராட்சி பொறியாளர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்