கல்லல் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் திருக்கல்யாணம்

மாசி மக திருவிழாவையொட்டி கல்லல் சோமசுந்தரேசுவரர், சவுந்திர நாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-02-15 18:38 GMT
காரைக்குடி,

மாசி மக திருவிழாவையொட்டி கல்லல் சோமசுந்தரேசுவரர், சவுந்திர நாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண உற்சவம்

காரைக்குடி அருகே கல்லலில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் மாலை சிறப்பு அலங்காரத்தில் சோமசுந்தரேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு ஊஞ்சல் சேவையில் சோமசுந்தரேசுவரர், சவுந்திர நாயகி அம்மன் அருள்பாலித்தனர்.

தேரோட்டம்
தொடர்ந்து அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  மஞ்சள், குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறு அடங்கிய பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 10-ம் திருநாளான இன்று(புதன்கிழமை) மாலை தேரோட்டம் நடக்கிறது.. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்