மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

கடலாடி அருகே ேமாட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் இறந்தார்.

Update: 2022-02-15 18:15 GMT
சாயல்குடி,

கடலாடி அருகே கிடாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா (வயது 21). பட்டதாரி. பாப்பாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் பூவேந்திர பாண்டியன் (20). கடலாடி காமாட்சி நாதன் மகன் ராஜாகுமார் (25). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் கடலாடியில் இருந்து மலட்டாறு பகுதியை நோக்கி சென்றனர். மலட்டாறு பகுதியில் இருந்து கடலாடி நோக்கி தேரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் அழகர் நாதன் (47) மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். 2 வாகனங்களும் கடலாடி நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு மோதி கொண்டன. இந்த விபத்தி்ல் பூவேந்திரபாண்டியன், தீபக்ராஜா, அழகர்நாதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ராஜாகுமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த 3 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு தீபக் ராஜாவை அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலாடி ராஜாகுமார் கொடுத்த புகாரின் பேரில் கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்