கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

Update: 2022-02-15 18:08 GMT
பெரியகுளம்: 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த 10 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. 

இதனைத்தொடர்ந்து நேற்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதுகுறித்து முன்கூட்டியே வனத்துறையினர் அறிவிப்பு வெளியிடவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் நேற்று குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.  

மேலும் செய்திகள்