ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முதுகுளத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-02-15 18:06 GMT
முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை

முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உலையூர் வடக்கு கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, ரோடு வசதி சுகாதார வசதி, மயான வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து கிராமத்தலைவர் அர்ஜுனன் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பிடம், போக்குவரத்து வசதி, ரேஷன் கடை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.மேலும் 100 நாள் வேலை முறையாகவும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை

 இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் மற்றும் வட்டார துணை அலுவலர் கருப்பையா ஆகியோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கைகளை பரிசீலித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்