முதியவர், சிகிச்சை பலனின்றி சாவு

நாகூர் சில்லடி தர்கா அருகில் மயங்கி கிடந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2022-02-15 17:40 GMT
நாகூர்:
 நாகூர் சில்லடி தர்கா அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்